பிரித்தானியாவில் 3 டீன் ஏஜ் சிறுவர்கள் கைது-40 வயதுடைய நபர் உயிரிழப்பு

11 ஆவணி 2025 திங்கள் 19:10 | பார்வைகள் : 234
பிரித்தானியாவில் நடந்த கொலை வழக்கில் 3 டீன் ஏஜ் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் கென்ட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 16 வயது சிறுமி, 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷெப்பி தீவில் உள்ள லெய்ஸ்டவுன்-ஆன்-சீ என்ற கடலோர ரிசார்ட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
வார்டன் பே சாலை வந்த கென்ட் பொலிஸார், சம்பவ இடத்தில் சிறு கும்பல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் தாக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட டீன் ஏஜ் சிறுவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1