Champ-de-Mars : லண்டன் பயணியிடம் €190,000 மதிப்புள்ள கைகடிகாரம் திருட்டு!!

11 ஆவணி 2025 திங்கள் 19:37 | பார்வைகள் : 5695
லண்டனில் இருந்து பரிசுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவரிடம் இருந்து €190,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் place Jacques-Rueff பகுதியில் ஓகஸ்ட் 10, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை 10 மணி அளவில் குறித்த பயணி வாடகை மகிழுந்து ஒன்றை வரவழைத்து, அதில் ஏறிய போது, உடனடியாகவே மர்ம நபர் ஒருவரும் மகிழுந்துக்குள் ஏறியுள்ளார். பயணி அதிர்ச்சியடைந்து, சுதாகரிப்பதற்குள் அவரது கையில் அணிந்திருந்த கடிகாரத்தை திருடிக்கொண்டு மகிழுந்தில் இருந்து வெளியேறினார்.
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். திருடப்பட்டது €190,000 யூரோக்கள் மதிப்புள்ள Richard Mille கைக்கடிகாரமாகும்.