Paristamil Navigation Paristamil advert login

கொல்லப்பட்ட அல்ஜசீரா ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் - இஸ்ரேலிய இராணுவம் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட அல்ஜசீரா ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் - இஸ்ரேலிய இராணுவம் குற்றச்சாட்டு

12 ஆவணி 2025 செவ்வாய் 06:39 | பார்வைகள் : 847


அல்ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல் ஷரிவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் என தெரிவித்துள்ளது.

 

அனாஸ் அல் ஷரிவ் ஹமாசின் உறுப்பினர் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் அவர் பெற்ற பயிற்சி விபரங்கள், சம்பள பட்டியல்கள் போன்றவை அந்த ஆவணத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

 

அவருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதை இந்த ஆவணங்கள் மீண்டும் உறுதி செய்கின்றன என இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் இந்த விடயத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

 

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் 2013 இல் ஹமாஸ் அமைப்பில் இணைந்தார் என தெரிவித்துள்ள இஸ்ரேலியஇராhணுவம் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குழுவின் தலைவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்