திருமணத்தை அறிவித்த ரொனால்டோ? காதலிக்கு வழங்கிய விலையுயர்ந்த மோதிரம்
12 ஆவணி 2025 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 951
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியை திருமணம் செய்ய உள்ளதாக புகைப்படம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ் உடன் 9 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இந்த நட்சத்திர ஜோடிக்கு 4 பிள்ளைகள் (ரொனால்டோவின் முதல் மகன் இல்லாமல்) உள்ளனர்.
நீண்ட காலமாக லிவிங் முறையில் காதலியுடன் வாழ்ந்து வரும் ரொனால்டோ ஒருவழியாக தனது திருமணத்தை அறிவித்துள்ளதாக ஒற்றை புகைப்படம் மூலம் தகவல் பரவி வருகிறது.
அர்ஜென்டினா-ஸ்பானிஷ் மொடலான தனது காதலி ஜார்ஜினாவுக்கு மோதிரம் அணிவித்து அவர் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
ரொனால்டோ தனக்கு அணிவித்த ஆடம்பரமான மோதிரத்தை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாக மாறியுள்ளது.
காரணம் இந்த வைர மோதிரத்தின் விலைதான். இதன் விலை 2 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan