Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : அருங்காட்சியம் மீது 'சைபர்' தாக்குதல்!!

பரிஸ் : அருங்காட்சியம் மீது 'சைபர்' தாக்குதல்!!

12 ஆவணி 2025 செவ்வாய் 15:49 | பார்வைகள் : 1973


பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள Muséum national d’histoire naturelle அருங்காட்சியகம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ஜூலை மாத இறுதியில் இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றது. இருந்தபோதும் பயணிகள் வருகையை அது பாதிக்கவில்லை எனவும், பயணிகளின் தரவுகள் திருடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் எவ்வித தயக்கமுமின்றி தொடர்ந்து வருகை தரமுடியும் என அருங்காட்சியகம் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை அருங்காட்சியக ஊழியர்கள் பணிக்கு வருகை தந்த போது கணனி எதுவும் வேலைசெய்யவில்லை எனவும், நுழைவுச் சீட்டு முன்பதிவு இணையத்தளம் எதுவும் வேலை செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் எழுத்து முறையில் பாரம்பரியமான நுழைவுச் சிட்டைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்