காசாவில் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் நெட்டன்யாகு- அவுஸ்திரேலிய பிரதமர்

12 ஆவணி 2025 செவ்வாய் 17:01 | பார்வைகள் : 166
காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் நிலையில் பெஞ்சமின் நெட்டன்யாகு- அவுஸ்திரேலிய பிரதமர்
காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் மனோநிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காணப்படுகின்றார் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட விரக்தியே பாலஸ்தீன அரசை அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் இஸ்ரேலிய பிரதமருடன் மீண்டும் பேசினேன் , அவர் பொதுவெளியில் தெரிவித்ததையே என்னிடம் தெரிவித்தார்,
அது அப்பாவி மக்களிற்கு ஏற்படுத்தப்படும் தாக்கங்களை மறுப்பதாக காணப்படுகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.