ஹமாஸ் அமைப்பினரை காசாவில் தங்க அனுமதிக்கக்கூடாது- ட்ரம்ப்

12 ஆவணி 2025 செவ்வாய் 18:01 | பார்வைகள் : 221
ஹமாஸ் அமைப்பினரை காசாவில் தங்க அனுமதிக்கக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்கள் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அதை நினைவுகூறும் வகையில், அக்டோபர் 7ஆம் திகதியை மறக்கவேண்டாம் என மீண்டும் மீண்டும் கூறிய ட்ரம்ப், ஹமாஸ் அமைப்பினரை காசாவில் தங்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார்.
மேலும், பிணைக்கைதிகளை விடுவிப்பதிலுள்ள பிரச்சினைகள் குறித்து அழுத்தம் திருத்தமாக பேசிய ட்ரம்ப், சூழ்நிலைகள் மாறினாலொழிய ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்.