Paristamil Navigation Paristamil advert login

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

10 ஆனி 2021 வியாழன் 06:38 | பார்வைகள் : 10067


 நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

 
பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.
 
 
நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும். உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.
 
நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.
 
நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.
 
நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.
 
பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும். நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.
 
நெல்லிச்சாறில் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும். நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய்  குணமாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்