காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்
7 ஆனி 2021 திங்கள் 17:07 | பார்வைகள் : 9503
கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். தற்போது கொரானா வைரஸ் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறியதாவது:-
மூக்கு ஒழுகுதல் (4.1.சதவீதம்), மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது. மேலும் வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு(40 சதவீதம்) பூரணமாக குணமடைவதை காணமுடிகிறது.
தொண்டையில் புண்(11.3 சதவீதம்.) எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம்(டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது. மேலும் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது. இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்பு உள்ளதால் காதுகேளாமை வரும் வாய்ப்புகளும் அதன் தாக்கமும் முற்றிலும் அறியப்படவில்லை.