விசேட செய்தி : சென் நதியில் இருந்து நான்கு சடலங்கள் மீட்பு!!

14 ஆவணி 2025 வியாழன் 13:43 | பார்வைகள் : 917
நேற்று புதன்கிழமை மாலை சென் நதியில் இருந்து நான்கு சடலங்கள் மீட்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் ஓகஸ்ட் 13, நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சென் நதியில் சடலம் ஒன்று மிதப்பதாக RER C தொடருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முதலில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டதாகவும், தேடுதல் பணிகளின் போது மேலும் மூன்று சடலங்கள் என மொத்தம் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு ஆண்களுடைய சடலங்களே அவை எனவும், அவர்களின் இறப்புக்கள் வேறு வேறு திகதிகளில் இடம்பெற்றவை எனவும், வ்வொரு சடலங்கள் தொடர்பாகவும் தனித்தனியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.