Bondyயில் பக்கி விபத்து: 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!

14 ஆவணி 2025 வியாழன் 15:07 | பார்வைகள் : 545
பொண்டி (Bondy) மற்றும் நோய்சி-லு-செக் (Noisy-le-Sec) எல்லையில் கடந்த 9ஆம் திகதி இரவு ஒரு பக்கி (buggy) வண்டி விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வண்டியை ஓட்டிய 24 வயது இளைஞர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சிறுவன் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு மரணமடைந்துள்ளான். சம்பவத்துக்குப் பிறகு அந்த இளைஞர் தப்பி ஓடியதும், காவல் துறையினரால் பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் அந்த இளைஞர், "தன்னை யாரோ கடத்தியதால் தான் தப்பியோடினேன்" என்று கூறியுள்ளார். காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துடன் நகர மேயர் ஒலிவியே சாராபெய்ரூஸ் (Olivier Sarrabeyrouse) தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்துள்ளார்.