ஏவுகணை திறனை கண்காணிக்க புதிய இராணுவப் படை - பாகிஸ்தான் அறிவிப்பு

14 ஆவணி 2025 வியாழன் 17:08 | பார்வைகள் : 177
ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படையொன்றை உருவாக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான மோதலுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான அண்மைய மோதலை நினைவுகூரும் வகையில், இஸ்லாமபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், கருத்துரைக்கும் போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இதனை அறிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய இந்த படை, பாகிஸ்தான் இராணுவத்தின் திறனை வலுப்படுத்துவதில் ஒரு மைல்கல்லாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த படை, இந்தியாவை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படுகின்றமை தெளிவாகப் புலப்படுவதாக, பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவும் போட்டித்தன்மையின் பின்னணியில், இரண்டு நாடுகளும் தங்களது இராணுவ திறன்களை மேம்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.