FDJ லொரி விபத்துக்கு உள்ளாகி வீதியில் பரவிய ஸ்கிராட்ச் டிக்கெட்டுகள்!!

14 ஆவணி 2025 வியாழன் 17:35 | பார்வைகள் : 585
பரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த A13 நெடுஞ்சாலையில், ஸ்கிராட்ச் டிக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரி Saint-Ouen-de-Thouberville அருகே பாலத்தின் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நேர்ந்துள்ளது. விபத்தின் போது, டிக்கெட்டுகள் நெடுஞ்சாலையில் பரவிய பின்னர் ஜான்டார்ம்கள் (Les gendarmes) அவற்றை சேகரித்து, லாரியைக் கூடுதல் சேதமின்றி மீட்டுள்ளனர்.
அந்த டிக்கெட்டுகள் இன்னும் Française des jeux (FDJ) நிறுவனத்தில் பதிவு செய்யப்படாததால், அவை எதற்கும் பயன்படாதவை. பொதுமக்கள் அவற்றை எடுத்தாலும், வெற்றி அல்லது இழப்பு எதுவும் அதில் அமையாது.
லாரி ஓட்டுநர் காயம் அடையவில்லை; போதை அல்லது மது பாதிப்பு எதுவும் இல்லையென மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.