இதுவரை இல்லாத அளவு கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்!!

14 ஆவணி 2025 வியாழன் 19:03 | பார்வைகள் : 551
இவ்வருடத்தில் இதுவரை இல்லாத அளவு கொக்கைன் போதைப்பொருள், தெற்கு பிரான்சில் இவ்வாரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
1,300 கிலோ கொக்கைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்றை ஜொந்தாமினர் மடக்கிப் பிடித்து மீட்டுள்ளனர். அதன் மொத்த மதிப்பு 100 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகூடிய கொக்கைன் போதைப்பொருள் இதுவாகும்.
இந்த வார திங்கட்கிழமை குறித்த பார ஊர்தி Bordeaux ( Gironde ) நகரை ஊடறுக்கும் A63 நெடுஞ்சாலையில் வைதது தடுத்து நிறுத்தப்பட்டது. குறித்த பார ஊர்தி ஸ்பெயினில் இருந்து பிரான்சுக்குள் நுழைந்ததாகவும், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய கொக்கைன் பறிமுதல் இதுவாகும் என ஜொந்தாமினர் தெரிவித்தனர்.