பரம்பரைச் சொத்துக்கான வங்கிக் கட்டணங்கள் €850 வரை மட்டுமே!!

14 ஆவணி 2025 வியாழன் 22:28 | பார்வைகள் : 640
இறந்த நபரின் கணக்கில் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளால் வசூலிக்கப்படும் கட்டணம் 850 யூரோக்களை தாண்டக்கூடாது என்று ஒரு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை வங்கிகள் மொத்தத் தொகையின் 1% வரை கட்டணமாக வசூலித்து வந்தன. ஆனால் இப்போது, இறந்தவர் சிறுவராக இருந்தால், கணக்கில் இருப்பு 5,910 யூரோக்களுக்குள் இருந்தால், அல்லது வாரிசு மிக எளிமையான நிலைமையிலிருந்தால், கட்டணமே விதிக்கக்கூடாது.
UFC-Que Choisir நுகர்வோர் அமைப்பு இதை "குடும்பங்களுக்கான ஒரு பெரிய வெற்றி" எனக் கூறியுள்ளது. வங்கிகள் பல சந்தர்ப்பங்களில் முழுமையாக விளக்கப்படாத கட்டணங்களை வசூலித்து வாரிசுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இப்போது, 850 யூரோ என்ற எல்லை அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும், மற்றும் இது ஆண்டுதோறும் பணவீக்கத்துடன் திருத்தப்படும்.