Paristamil Navigation Paristamil advert login

கண்களுக்கு நல்ல பலன்களை தரும் உலர் திராட்சை !!

கண்களுக்கு நல்ல பலன்களை தரும் உலர் திராட்சை !!

30 வைகாசி 2021 ஞாயிறு 08:49 | பார்வைகள் : 11489


 உலர் திராட்சை சருமத்தில் இருக்கும் செல்களின் அழிவை கட்டுப்படுத்தி தோல் சுருக்கம், முதுமை தோற்றம் போன்றவற்றை நீக்கி இளமையை தக்க வைத்து  கொள்கிறது.

 
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், ஒரு லிட்டர் நீரில் 15-20 உலர் திராட்சை சேர்த்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைக்க வேண்டும். இந்த  நீரை நாள் முழுவதும் குடித்து, திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
 
 
 
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஊறவைத்த உலர்  திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
 
உலர் திராட்சையில் விட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களை தரும். மட்டுமல்லாது கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வை குறைபாடு நீங்கி, பார்வை திறன் மேம்படும்.
 
உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து மூன்று  மாதம் சாப்பிட்டு பாருங்கள் அப்போது உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.
 
மேலும் இதில் சுக்ரோஸ், ப்ரெக்டொஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், இரும்புசத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து  சத்துக்களும் இதில் உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்