பரிஸ் : கத்திக்குத்துக்கு தாக்குதலில் ஒருவர் பலி!!

15 ஆவணி 2025 வெள்ளி 12:48 | பார்வைகள் : 417
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். ஓகஸ்ட் 14 - நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Boulevard de la Chapelle பகுதியில் உள்ள Rue Marx-Dormoy வீதியில் வைத்து நள்ளிரவு 12.30 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கைகளில் கூரான கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு ஒருவரை மிரட்டியுள்ளார். அவர் மீது பாய்ந்து சரமாரியாக குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். கொலையாளி சில நிமிடங்களிலேயே கைகளில் இரத்தக்கறையுடன் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கமராவில் உதவியுடன் அவர் 10 ஆம் வட்டாரத்தின் Rue de Maubeuge வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.