பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் ?

15 ஆவணி 2025 வெள்ளி 12:58 | பார்வைகள் : 178
தமிழில் பிக்பாஸ் நிகிழ்ச்சி 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதல் 7 சீசன்கள் வரை கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இடையில் அவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில் சில வாரங்கள் ரம்யா கிருஷ்ணன், சிம்பு தொகுத்து வழங்கினர். ஆனால் பிக்பாஸ் சீசன் 8ஐ நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார்.
பட வேலைகள், அமெரிக்க டூர், சம்பளம் உள்ளிட்ட விவகாரத்தால் கமல்ஹாசன் விலகிட, விஜய்சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நயன்தாரா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்டோர் பெயர் அடிபட்டது. ஆனால், விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்போது கமல்ஹாசன் ப்ரியாகிவிட்டார். அவர் தொகுப்பாளரா? விஜய்சேதுபதி தொடர்வரா? வேறு புதியவரா என்று விசாரித்தால் இந்தமுறையும் விஜய்சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார்.
அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 9 தொடங்க உள்ளது. சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டியில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. ஏற்கனவே அங்கே மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அங்கே அமைக்கப்பட்ட பிக்பாஸ் வீடு செட்டில்தான் மலையாள போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதை தொகுத்து வழங்கும் மோகன்லால் வார இறுதி நாட்களில் இங்கு வந்து படப்பிடிப்பில் பங்கு பெறுகிறார்.
இப்போது புரிஜெகன்நாத் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். விரைவில் பிக்பாஸ் சீசன் 9 படப்பிடிப்புக்கு தக்கவாறு தனது கால்ஷீட்டை மாற்றிக் கொள்வார். கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் அவர் வெளியூர் படப்பிடிப்பில் அதிகம் இருந்தார். வார இறுதியில் சென்னைக்கு வந்தார். இந்த ஆண்டு அதிகபட்சம் சென்னையில் படப்பிடிப்பு இருக்கும்போது பிளானிங் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது என்கிறார்கள்.