Paristamil Navigation Paristamil advert login

‘கூலி’ வசூல் சாதனை படைத்ததா ?

 ‘கூலி’ வசூல் சாதனை படைத்ததா ?

15 ஆவணி 2025 வெள்ளி 13:58 | பார்வைகள் : 182


இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான ‘கூலி’ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் இன்று படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 151 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படம் ஒன்றின் முதல் நாள் வசூலில் இதுவே அதிகம் என்றும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்