Paristamil Navigation Paristamil advert login

சுவாச பிரச்சனைகளை நீக்க உதவும் மிளகு...!!

சுவாச பிரச்சனைகளை  நீக்க உதவும் மிளகு...!!

28 வைகாசி 2021 வெள்ளி 06:34 | பார்வைகள் : 9148


 சுவாச பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதனை போக்க மிளகு பெரிதும் உதவுகின்றது. மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும் ஒரு முக்கிய மூலிகையாக செயல்படுகின்றது. 

 
மிளகு சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை போக்கி, சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது அதிக அளவு உதவுகின்றது.
 
 
 
 
எந்த விதமான சுவ பிரச்சனைகளையும் எளிதாக போக்க மிளகு உதவும். இந்த வகையில் இதில் இருக்கும் சளி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எளிதாக ஆஸ்த்மா அறிகுறிகளை குணப்படுத்த உதவும். மேலும் சுவாச குழாயை தெளிவுபடுத்தி எளிதாக சுவாசிக்கவும் உதவும்.
 
நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது மிளகின் ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள், நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது. இதனால் நோய் பரவுவதும் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகின்றது. மேலும் தமனிகள் சுவற்றில் இருந்து கொழுப்பை அகற்றி சுத்தமாக  வைத்திருக்க உதவுகின்றது.
 
மிளகு, சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும் உடலில் இருக்கும் அதிக அளவிலான நீரையும் வெளியேற்ற உதவும். மேலும் சிறுநீர் மூலமாக தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்தால், அதனையும் வெளியேற்ற உதவும். இதனால் தமனிகளும் சுத்தமாகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்