Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில இளைஞனின் உயிரை பறித்த நாய்

இலங்கையில இளைஞனின் உயிரை பறித்த நாய்

15 ஆவணி 2025 வெள்ளி 17:29 | பார்வைகள் : 154


நாயொன்று பலியான நிலையில், 26 வயதான நபரும் மரணமடைந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் வியாழக்கிழமை (14) அதிகாலை 2.15 மணியளவில் கரமெட்டிய பலகொல்லவில் 28வது கிலோமீட்டர் மைல்கல் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பதுலுஓயா, கண்டகெட்டிய, கரமெட்டிய, பேக்கரி ஹவுஸைச் சேர்ந்த 26 வயதுடைய கோரலகே மிலிந்த மதுமல் என்ற இளைஞர் ஆவார்.

மீகஹகிவுல பகுதியில் இருந்து கரமெட்டியவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த இளைஞர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து குறித்து கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்