Paristamil Navigation Paristamil advert login

பள்ளிவாசலுக்கு தீ வைத்த ஒருவர் கைது!!

பள்ளிவாசலுக்கு தீ வைத்த ஒருவர் கைது!!

15 ஆவணி 2025 வெள்ளி 18:13 | பார்வைகள் : 319


இஸ்லாமிய பள்ளிவாசலை தீ வைத்து எரிக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பிரெஞ்சு நகரமான Châtillon-sur-Seine (Côte-d'Or) இல் இச்சம்பவம் இன்று ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் குறித்த பள்ளிவாசலின் கதவு இடுக்கில் காகிதம் ஒன்றை நுழைத்து, அதனை தீ வைத்துள்ளார். இதனை பாதசாரி ஒருவர் பார்த்துவிட்டு, சம்பவத்தில் தலையிட்டுள்ளார். தீயை உடனடியாக அணைத்துள்ளார். அத்தோடு காவல்துறையினரையும் அழைத்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த நபரைக் கைது செய்தனர்

இத்தகவலை உள்துறை அமைச்சர் Bruno Retailleau சற்று முன்னர் உறுதிப்படுத்தினார். மத வெறுப்பின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்