Paristamil Navigation Paristamil advert login

Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்!!

Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்!!

16 ஆவணி 2025 சனி 16:51 | பார்வைகள் : 509


Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஓகஸ்ட் 15, நேற்று வெள்ளிக்கிழமை குறித்த தொடருந்து நிலையத்தில் RER B தொடருந்துக்கான நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரச வலி எடுத்துள்ளது. அதை அடுத்து அவர் அங்கிருந்த உதவியாளர்களின் உதவியுடன் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலம் என RATP அறிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த குழந்தைக்கு பரிசாக அவரது 18 ஆவது வயது வரை இலவச போக்குவரத்து பாஸ் வழங்கப்படுவதாகவும் RATP அறிவித்துள்ளது.

முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் Gare du Nord தொடருந்து நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் குழந்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்