Paristamil Navigation Paristamil advert login

நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்

நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்

17 ஆவணி 2025 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 144


சென்னை அடுத்த வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் இயங்கி வரும் வி.ஐ.டி., பல்கலை, துவங்கப்பட்டு 15 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில், அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்; துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்; இணை துணைவேந்தர் தியாகராஜன் வரவேற்றார்.

தொழிலில் தோல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி., பேசியதாவது:

நாடு சுதந்திரம் பெற்ற பின், அனைத்து விஷயங்களிலும் நாம் வெற்றி அடைந்து விட்டோமா? நாட்டில், ஜாதி, மத வேறுபாடுகளை களைவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம்.நானும், என் தொழிலில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற மாணவர்கள், உலகின் பல நாடுகளில் பணியாற்றி, இந்தியாவுக்கும், இந்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்கள், தோல்விகளை இறக்கி வைத்து, வெற்றியை சுமந்தவர்களாக உள்ளனர். திமிரோ, வீரமோ, வணக்கத்திற்கு உரியது அல்ல; நம் தாய்மொழி தான் வணக்கத்திற்கு உரியது. வீரத்தின் உச்சமே, அஹிம்சை.

முன்னதாக, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:

கடந்த 2010ம் ஆண்டு, 608 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இந்த பல்கலையில் தற்போது, 23,000 மாணவர்கள் பயில்கின்றனர். கூடுதல் நிதி இந்தியாவில், மக்கள் தொகைக்கு ஏற்ப உயர் கல்வி படிப்போர் விகிதம் இல்லை. மத்திய அரசு தன் மொத்த பட்ஜெட்டில், 2 சதவீதத்தை மட்டுமே கல்விக்காக ஒதுக்குகிறது.

இந்திய அளவில், தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னேறி உள்ளது. நடப்பாண்டில், தமிழக அரசின் மொத்த வருவாயில், 21 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கும் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.

ராஜ்யசபாவில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசன், இது குறித்தும், உயர் கல்விக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவும், பார்லிமென்டில் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்