Paristamil Navigation Paristamil advert login

மாலியில் பிரெஞ்சு நபர் கைது! - கண்டனம்!!

மாலியில் பிரெஞ்சு நபர் கைது! - கண்டனம்!!

16 ஆவணி 2025 சனி 19:33 | பார்வைகள் : 1114


ஆபிரிக்க நாடான மாலியில் பிரெஞ்சு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்செயலுக்கு பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் (Quai d'Orsay) கண்டனம் வெளியிட்டுள்ளது.

மாலியில் உள்ள அமைப்புக்களை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆனால் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பிரான்ஸ் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பிரெஞ்சு உளவுத்துறைக்காக பணியாற்றுகிறார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாலியில் இராணுவ சதி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு Junta இராணுவ அமைப்பு தலைமையேற்று அங்கு இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது. அதன் ஜனாதிபதியாக Assimi Goïta என்பவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்