Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனுடனான ரஷ்ய மோதல் - ட்ரம்ப் - புடின் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி

உக்ரைனுடனான ரஷ்ய மோதல் - ட்ரம்ப் - புடின் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி

17 ஆவணி 2025 ஞாயிறு 04:28 | பார்வைகள் : 192


உக்ரைனுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகிறார்.

 

மேலும் ட்ரம்ப்புடனான புரிதல் உக்ரைனில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்.

 

மோதலைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டாம் என்று யுக்ரைன் மற்றும் ஐரோப்பாவை புடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

உலகளாவிய கவனத்தை ஈர்த்த அலஸ்காவில் நடந்த ட்ரம்ப்-புடின் அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துகளை வழங்குவதற்கு முன்பு, புடின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

 

இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுகிறார், ஆனால் ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை எந்த உடன்பாடும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

நமது நாடுகள் ஒரு கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நாம் உண்மையில் நெருங்கிய அண்டை நாடுகள், எனவே இங்கு சந்திப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

 

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உரையாடல் காலதாமதமானது.

 

நாம் மோதலில் இருந்து வெளியேற வேண்டும். 2022 இல் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால், யுக்ரைன் மோதல் ஒருபோதும் நடந்திருக்காது.

 

யுக்ரைனில் தற்போதைய நிலைமை ரஷ்யாவிற்கு ஒரு சோகம் மற்றும் பெரும் வேதனையாகும்.

 

யுக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா ஒப்புக்கொள்கிறது.

 

நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தயாராக இருக்கிறோம் என்று ட்ரம்ப்புடனான ஆரம்ப சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புடின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

 

யுக்ரைன்-ரஷ்யா போருக்கு இடைநிறுத்தம் ஏற்படுத்தும் நோக்கில் அலஸ்காவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் தலைவர்களும் அலஸ்காவிற்கு வந்தனர்,

 

மேலும் அங்கு நடந்த சந்திப்பு இந்த ஆண்டின் மிக முக்கியமான அரச தலைவர்களின் சந்திப்பாக மாறியது.

 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு ட்ரம்ப் மற்றும் புடின் தெரிவித்த கருத்துகளுக்குப் பிறகு, ஊடகங்களுக்குக் கேள்விகள் கேட்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

இரு நாடுகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு, உலகின் கவனத்தை ஈர்த்தது.

 

இருப்பினும், சந்திப்புக்கு முன்பு, இந்த விவாதத்தில் தான் பங்கேற்பது யுக்ரைனுக்கு ஒரு தரகர் அல்ல என்றும், ரஷ்யா-யுக்ரைன் போருக்கு ஒரு தீர்வை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர மட்டுமே பாடுபடுவதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

 

இந்த அமைதி வட்ட மேசையின் அடுத்த கூட்டத்திற்கு ட்ரம்ப்பை மொஸ்கோவிற்கு புடின் அழைத்தார்.

 

அழைப்பை ஏற்றுக்கொள்வதில் தான் உற்சாகமாக இருப்பதாக ட்ரம்ப் கூறினார்.

 

இருப்பினும், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீர்க்கமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் என்றும் யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி அதில் பங்கேற்பார் என்றும் ட்ரம்ப் முன்பு கூறிய போதிலும், புடின் இன்று செலன்ஸ்கியை மொஸ்கோவிற்கு அழைக்கவில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்