விமான விபத்தில் இருவர் பலி!!

17 ஆவணி 2025 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 214
பிரான்சின் தென்கிழக்கு எல்லை மாவட்டமான Saint-Pons (Alpes-de-Haute-Provence) இல் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓகஸ்ட் 16, நேற்று சனிக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய விமானம் ஒன்று, Barcelonnette (Alpes-de-Haute-Provence) விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் Ubaye பள்ளத்தாக்கின் மேல் பயணித்துக்கொண்டிருக்கும்போது, விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்து, கீழே விழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், இரண்டாம் நபர் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் தீப்பிடித்தமைக்குரிய காரணம் கண்டறியப்படவில்லை.