ஓட்டுனர் உரிமம் இல்லாத சாரதி.. நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை!!

17 ஆவணி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 1558
ஓட்டுனர் உரிமம் இல்லாத சாரதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளார்.
ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை Toulouse (Haute-Garonne) நகரில் Avenue des États-Unis பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது Peugeot 3008 ரக மகிழுந்து ஒன்றினை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் சாரதி மகிழுந்தை நிறுத்தாமல், தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளார்.
சாரதிக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதை உடனடியாக தெரிந்துகொண்ட காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர். குறித்த நபர் வேகமாகச் சென்று, அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் பின்னால் மகிழுந்தை நிறுத்திவிட்டு, மகிழுந்தின் விளக்குகளையும் அணைத்துள்ளார்.
ஆனால் குறித்த மகிழுந்தை சுலமாக கண்டறிந்த காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்தனர். அதன் பின்னரே அவருக்கு OQTF எனும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் எனவும், அவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவினை தாண்டியும் அவர் பிரான்சில் வசிக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.
அவரை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.