Paristamil Navigation Paristamil advert login

ஜோன்-லுக் மெலோன்சோன் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அழைப்பு!!

ஜோன்-லுக் மெலோன்சோன் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அழைப்பு!!

17 ஆவணி 2025 ஞாயிறு 11:42 | பார்வைகள் : 1510


பிரான்சின் அரசியல்வாதி ஜோன்-லுக் மெலோன்சோன் மற்றும் பல LFI (La France insoumise) பொறுப்பாளர்கள், இந்த சனிக்கிழமை 16 ஓகஸ்ட் அன்று, பிரதமர் பிரோன்சுவா பய்ரூவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், "அனைத்தையும் முடக்குவோம்" எனும் செப்டம்பர் 10ஆம் தேதியிலான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவும் அழைத்துள்ளனர்.

"இந்த அரசைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைக்கு நாங்கள் அழைக்கிறோம். மக்கள் போராட்ட இயக்கங்கள் மூலமாகவும், பாராளுமன்றத்தில் உடனடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலமாக கூடவும் வேண்டும். ஒன்றாகச் செயற்பட வேண்டும். ஒன்றை மட்டும் செய்வது பயனற்றது அல்லது நிச்சயமற்றது," என்று மெலோன்சோன் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பய்ரூவை அனுமதிக்கமாட்டோம்," என்பதன் அடிப்படையில் வலியுறுத்தி, பாராளுமன்றம் உடனடியாக விசேட அமர்வில் கூட வேண்டும் எனவும் கோரினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானக் கையெழுத்துக்களில், LFI பாராளுமன்றத் தலைவி மதில்த் பணோ, கட்சித் தொடர்பாளர் மனுவல் பொம்பார்ட் ஆகியோரும் அடங்குவர்.

இவர்களின் கூற்றுப்படி, "இந்த அரசு உணர்ச்சி அற்றது" மற்றும் "வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பேரழிவை ஏற்படுபேரழிவை ஏற்படுத்துகின்றது.

"பிரோன்சுவா பய்ரூவும், அவரது அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும்," எனவும் அவர்கள் கூறினர். மேலும், LFI பொறுப்பாளர்கள் "செப்டம்பர் 10ஆம் தேதியிலான மக்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளோம்" எனவும் அறிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்