Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் மிளகு வறுவல்.

சிக்கன் மிளகு வறுவல்.

17 ஆவணி 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 122


உணவு என்றாலே பெரும்பாலும் சிக்கன் பிரியாணி, கோழி வறுவல், மீன் வருவல், மட்டன் பிரியாணி போன்ற அசைவ உணவு தான் நமக்கெல்லாம் முதலில் ஞாபகத்திற்கு வரும். பெரும்பாலும் தாபா (Hotel) போன்ற உணவகங்களில் மட்டுமே கிடைக்கின்ற கோழிக்கறி மிளகு வருவல் எப்பவுமே தனி ருசியா தான் இருக்கும். அந்த ருசி மாறாம அதை வெறும் 20 நிமிடங்களில் வீட்டிலிருந்தே எப்படி சமைப்பது என்பது பற்றி இந்தக் குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கோழிக்கறி மிளகு வறுவல் செய்ய தேவையானவை: * ஒரு கிலோ நாட்டுக்கோழி கறி* இரண்டு தேக்கரண்டி மிளகு* இஞ்சி*பூண்டு *பச்சை மிளகாய்* சின்ன வெங்காயம் 1/4 கிலோ

கோழிக்கறி மிளகு வறுவல் செய்முறை: முதலில் கோழிக்கறி மிளகு வறுவல் செய்ய இரண்டு தேக்கரண்டி அளவு மிளகாய் பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வானலில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, சீரகம், சிறிதளவு சோம்பு மாற்றம் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக பச்சை நறுமணம் போகும் அளவிற்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின் கறிவேப்பிலை சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சிக்கன் கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வேக விட வேண்டும். பின் தேவையான அளவு சிக்கன் மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். நன்றாக மசாலாவை பிரட்டி விட வேண்டும். பின்னர் கோழிக்கறி மிளகு வறுவலுக்கு முக்கியமான ஒன்றான பொடி செய்து வைத்த மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு நிமிடம் வதைக்குப் பிறகு சூடான சுவையான கோழிக்கறி மிளகு வறுவல் தயார்.

இந்த சிக்கன் மிளகு வறுவல் பிரியாணி உடன் சாப்பிடுவதற்கும் சாம்பார் சாதம், ரச சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிடுவதற்கும் சிறந்த ரெஸிபியாக இது இருக்கும். வீட்டிலிருந்தே எளிய முறையில் நீங்களும் இதனை தயார் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்