Paristamil Navigation Paristamil advert login

வால்நட்ஸ் ஏன் மூளைக்கு சிறந்தது தெரியுமா..?

வால்நட்ஸ் ஏன் மூளைக்கு சிறந்தது தெரியுமா..?

17 ஆவணி 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 186


நாம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் நட்ஸ்களில் மூளைக்கு சிறந்த நட்ஸாக வால்நட்ஸ் கருதப்படுவதற்கான 5 முக்கிய காரணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மனித மூளையைப் போலவே தோற்றமளிக்கும் வால்நட், அதன் வடிவத்தால் மட்டும் பிரபலமில்லை. அறிவாற்றல், நினைவாற்றல், மனநிலை என மூளை ஆரோக்கியத்தின் பல பரிமாணங்களையும் மேம்படுத்தும் சக்தி இதில் அடங்கியிருக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முதல் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் வரை, வால்நட்ஸ் ஏன் மூளைக்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
 

வால்நட் மனித மூளையின் வடிவத்தை ஒத்திருப்பது ஒன்றும் சும்மா இல்லை, உண்மையில் அது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல அதிசய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வயதிலும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததால், வால்நட் “மூளைக்கான நட்ஸ்” என்ற பெயரை சரியாகவே பெற்றிருக்கிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சக்தி:வால்நட்ஸ், மூளை செல்களின் வளர்ச்சி மற்றும் தகவல்தொடர்புக்கு அவசியமான தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தை (ALA) அதிகம் கொண்டுள்ளது.

- நியூரான்கள் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது
- நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது
- அல்சைமர், பார்கின்சன் போன்ற நரம்புச் சிதைவு நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள்:வால்நட்ஸில் உள்ள வைட்டமின் இ, மெலடோனின், பாலிஃபீனால்கள் மூளையில் “ஃப்ரீ ரேடிக்கல்களை” எதிர்த்து செல்களை பாதுகாக்கின்றன.இதனால்:
- மூளை செல்களின் சேதம் குறைகிறது
- வயதான செயல்முறை மெதுவாகிறது
- நினைவாற்றல் மற்றும் சிந்தனை தெளிவாக நிலைக்கிறது
பாலிஃபீனால்களின் நரம்பு பாதுகாப்பு:
வால்நட்ஸில் உள்ள பாலிஃபீனாலிக் சேர்மங்கள், மூளை அழற்சியை குறைத்து, நினைவாற்றலை வலுப்படுத்துகிறது.

- நரம்புக்கு பாதுகாப்பை அளிக்கின்றன
- மூளை சிதைவைக் கட்டுப்படுத்துகின்றன
- மூளையின் செயல்திறனை நீண்ட காலம் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன
மனநிலைக்கு இயற்கை “மூட்லிஃப்டர்”:
வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நரம்பியக்கடத்திகளை சமநிலைப்படுத்துகின்றன.

- மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது
- மனச்சோர்வு அறிகுறிகள் குறைகின்றன
- உணர்ச்சி நிலைத்தன்மை கிடைக்கிறது
-அடிக்கடி வால்நட் சாப்பிடுவதால், மூளையும் இதயமும் ஒரே நேரத்தில் ஆரோக்கியமாகிறது.
அமிலாய்டு பிளேக்குகளை தடுக்கும் சக்தி:

- பிளேக் உருவாவதைத் தடுக்கிறது
- ஏற்கனவே உருவான பிளேக்குகளை குறைக்க உதவுகிறது
- அறிவாற்றல் வீழ்ச்சியை தாமதப்படுத்துகிறது

வால்நட்ஸ் என்பது வெறும் சாதாரண சிற்றுண்டி அல்ல, அது மூளை, மனநிலை, நினைவாற்றல், இதயம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து பாதுகாக்கும் இயற்கையான அற்புத உணவாகும். தினசரி உணவில் ஒரு கைப்பிடி வால்நட்ஸை சேர்த்துக் கொள்வது, உங்களது மூளைக்கு செய்யக்கூடிய மிகச் சிறந்த ஆரோக்கிய முதலீடு ஆகும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்