Paristamil Navigation Paristamil advert login

La Courneuve மற்றும் Pantin இல் உள்ள தேவாலயங்கள் போதைக்கு அடிமையானவரால் சேதம்!!

La Courneuve மற்றும் Pantin    இல் உள்ள தேவாலயங்கள் போதைக்கு அடிமையானவரால் சேதம்!!

17 ஆவணி 2025 ஞாயிறு 17:14 | பார்வைகள் : 881


ஆகஸ்ட் 16, சனிக்கிழமை காலை, சில மணிநேர இடைவெளியில், Seine-Saint-Denis பகுதியில், ஒரு போதைக்கு அடிமையானவர் சனிக்கிழமை காலை இரண்டு தேவாலயங்களில் சேதம் விளைவித்துள்ளார். 

Pantinஇல் உள்ள Sainte-Marthe-des-Quatre-Chemins, தேவாலயத்திலும், La Courneuveஇல் உள்ள Saint-Yves தேவாலயத்திலும் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன, நாற்காலிகள் கவிழ்க்கப்பட்டுள்ளன மற்றும் உபகரணங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. சேதம் விளைவித்த நபர் விரைவில் கைது செய்யப்பட்டார். 

Sainte-Marthe தேவாலயத்தில் யாரும் இல்லை; Saint-Yves தேவாலயத் திருப்பலி நடைபெற்று கொண்டிருந்தது. விசுவாசிகள் பதற்றமடைந்தபோதும், யாரும் காயம் அடையவில்லை. இருபத்தைந்து வழிபாட்டாளர்கள் அமைதியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நபர் க்ராக் போதைப்பொருளுக்கு (crack) அடிமையாக இருந்தார் என்றும், சம்பவத்தின் போது தெளிவற்ற முறையில் நடந்துகொண்டார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த நபர் ஒரு சிறிய, சுவிஸ் இராணுவ கத்தி போன்ற  ஆயுதத்தை வைத்திருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

இந்த பகுதி பல ஆண்டுகளாக க்ராக் போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருகிறது. 2022ல் ஒரு பெரிய முகாம் கலைக்கப்பட்டாலும், போதைப்பொருள் நுகர்வோர் இன்னும் அந்த இடங்களில் காணப்படுகிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்