ஏமன் மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

17 ஆவணி 2025 ஞாயிறு 18:04 | பார்வைகள் : 176
ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
17.08.2025 இஸ்ரேல் கடற்படை, எமன் நாட்டின் தலைநகர் சனா அருகே உள்ள Haziz மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹவுதி போராளிகள் அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர் என்ற காரணத்தால், தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த மின் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்பதால், இது ஒரு போர் குற்றமாக இருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த ஏவுகணை தாக்குதலில், மின் உற்பத்தி இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு பரவியதால், தீயணைப்புக் குழுக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தின.
சனா நகர மக்கள் இரண்டு பெரும் வெடிப்பு சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, துறைமுகம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏமனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல்கள், இஸ்ரேலின் காசா போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன.
தற்போது மின் நிலையம் மீதான தாக்குதல், மத்திய அக்கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் போர் சூழ்நிலையை மேலும் தீவிரமாக்குகிறது.