உக்ரைன் – அமெரிக்க ஜனாதிபதிகளிடையே விசேட சந்திப்பு

17 ஆவணி 2025 ஞாயிறு 19:04 | பார்வைகள் : 203
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இடையே விசேட சந்திப்பு நாளை 18.08.2025 வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இச் சந்திப்பில் கலந்து கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி , ஜேர்மன் ஜனாதிபதி , பின்லாந்து ஜனாதிபதி மற்றும் இத்தாலிய பிரதமர் ஆகியோர் நாளை (18) அமெரிக்கா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.