Paristamil Navigation Paristamil advert login

தீயணைப்பு படை வீரர் பலி!!

தீயணைப்பு படை வீரர் பலி!!

19 ஆடி 2025 சனி 17:02 | பார்வைகள் : 377


மீட்புப்பணி ஒன்றுக்காக விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர் ஒருவர் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்.

மேற்கு பிரான்சின் Sarthe நகரில் ஜூலை 18, நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய தீயணைப்பு வீரர் ஒருவர் மீட்பு பணி ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அன்று அவர் Sarthe மாவட்டத்தில் பணிக்குச் சேர்ந்திருந்தார்.

அவரது மறைவுக்கு அம்மாவட்ட தீயணைப்பு படையினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். ”அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அவர்களது இரங்கல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்