Paristamil Navigation Paristamil advert login

பூண்டு சட்னி!!

 பூண்டு சட்னி!!

19 ஆடி 2025 சனி 19:12 | பார்வைகள் : 113


அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பூண்டு (Garlic). இது ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது உணவில் மட்டும் அல்லாமல் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டின் முக்கிய நன்மைகள் என்னவென்றால் மனநலத்திற்கு உதவுகிறது, சிறந்த உயிர்க்கொல்லி, இதய நலத்திற்குச் சிறந்தது, இளமையாக இருக்க,மாறுபட்ட நோய்களை எதிர்க்கும் சக்தி தரும்.

மேலும் மருத்துவ சிகிச்சையில் சிறுநீரகக் கோளாறுகளுக்கு, உதவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் பூண்டு அன்றாட சமையலில் இடம்பெறும் முக்கியமான ஒன்று. தினமும் பூண்டு பயன்படுத்தி சமையல் செய்யப்பட்டும் வருகிறது.

‍பெரும்பாலும் பூண்டு சுவை பிடிக்காது என்று சொல்வார்கள் குறைந்த அளவில் தான் இருப்பார்கள் ஏனென்றால் பூண்டு குழம்பு, பூண்டு ஊறுகாய், போன்ற ரெசிபிகளுக்கு அதிக அளவில் சுவைத்து சாப்பிட ஆட்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி பூண்டு சட்னிக்கும் தனி சுவை இருக்கும். அந்த வகையில் இட்லி, தோசை, சப்பாத்தி,சுட சுட சாதம் இல்லை பழைய சாதம் கூட வைத்து சாப்பிட கூடிய அளவில் காரணமாக பூண்டு வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..பூண்டு சட்னி  செய்ய தேவையான பொருட்கள்:7 வரமிளகாய், 30 பல் பூண்டு, 3 தக்காளி, உப்பு, எண்ணெய்.

செய்முறை கடாயில் சிறிதளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பின்பு 7 வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே கடாயில் உள்ள எண்ணெயில் 30 பல் பூண்டு சேர்த்து  வதக்கிக் கொள்ளவும். அத்துடன் 3 தக்காளி பழத்தை இரண்டாக அறுத்து எண்ணெயில் வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு அரைத்த பின்னர் தாளிப்புக்கு எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்தால் சுவையான பூண்டு சட்னி தயார்.

இதனை செய்ய குறைந்த நேரமும் குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே தேவைப்படுகிறது ஆனாலும் சுவைக்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும் கண்டிப்பாக ஒரு முறை இந்த பூண்டு சட்னி ரெடி பண்ணி சாப்பிட்டு பாருங்க.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்