Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் கோர விபத்து - 21 பேர் பலி

ஈரானில் கோர விபத்து - 21 பேர் பலி

20 ஆடி 2025 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 241


தெற்கு ஈரானில் பஸ் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் 19.07.2025 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விபத்தில் பஸ்சில்பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 34பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்