நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம் - அமெரிக்காவில் பரபரப்பு

20 ஆடி 2025 ஞாயிறு 12:12 | பார்வைகள் : 815
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கிப் பயணித்த போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில், 19-07-2025 திடீரென தீப்பற்றியுள்ளது.
இதன்காரணமாக குறித்த விமானம் மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1