அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா ?

20 ஆடி 2025 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 171
அஜித்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை யார் இயக்குகிறார்? கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். பல கெட்டப்களில் அஜித்தை வைத்து விதவிதமாக மாஸான அறிமுகங்கள் கொடுத்துது வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அஜித்துடன் இணைகிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இது தொடர்பாக அவரே அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “அஜித்சார் கூட இன்னொரு படம் பண்றேன். அது குட் பேட் அக்லி மாதிரி கேங்ஸ்டர் படமா இருக்காது. வேறு கதைக்களமாகத்தான் இருக்கும்.
சீக்கிரம் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிய வரும். இந்த ஆண்டு பல பெரிய படங்கள் ஹிட் ஆயிருக்கு, அந்த வரிசைல 'குட் பேட் அக்லி'யும் இருந்தா சந்தோஷம்தான். நல்ல கன்டென்ட் கொண்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி” என்றார். அஜித் - ஆதிக் இணையும் படம் ஹார்பரை பின்னணியாக கொண்ட மாஸ் கமர்ஷியல் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.