கட்டிடம் ஒன்றை தகர்த்த 800 கிலோ டைனமைட் வெடி!!

20 ஆடி 2025 ஞாயிறு 17:12 | பார்வைகள் : 1683
Lille நகரில் உள்ள கட்டிடம் ஒன்று 800 கிலோ டைனமைட் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை காரணமாக 1,700 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இன்று ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் Lille நகரில் உள்ள Loos எனும் பகுதியில் இடம்பெற்றது. 28 மாடிகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம் ஒன்று முற்பகல் 11.30 மணி அளவில் வெடித்து நொருக்கப்பட்டது. பாரிய சத்தத்துடன் வெடித்து நொருங்கி விழுந்துள்ளது. இதற்காக அருகில் வசித்த 1,700 பேர் வெளியேற்றப்பட்டனர்.
குறித்த கட்டிடம் 1968 ஆம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும், அதனை தகர்த்துவிட்டு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
19,000 தொன் எடை கட்டிட இடிப்பாடுகள் அகற்றப்பட உள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1