ரஷ்யாவின் பசுபிக்கரையோர பகுதிகளை தாக்கியது பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை

20 ஆடி 2025 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 688
அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்திற்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடலில், இன்று அடுத்தடுத்த 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
32 நிமிடங்களுக்குள் 3 நிலநடுக்கம் ஏற்பட்டதில், 2 நிலநடுக்கங்கள் 6.7 ரிக்டர் அளவிலும், ஒன்று 7.4 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளன.
அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, அதே பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.
ஹவாய் தீவுகளுக்கும் முன்னர் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1