ஆவணமில்லாத வெளிநாட்டவரை மாதம் 250 யூரோக்கு தினமும் 13 மணி நேர வேலை வாங்கிய கேரேஜ் உரிமையாளர்!!!

20 ஆடி 2025 ஞாயிறு 20:45 | பார்வைகள் : 1273
திரான்சியில் (Drancy) உள்ள ஒரு கேரேஜ் உரிமையாளர், மாதம் வெறும் 250 யூரோக்களுக்கு, வாரத்திற்கு ஆறு நாட்கள், தினமும் 11 முதல் 13 மணி நேரம் வரை, புலம்பெயர் மற்றும் ஆவணமில்லாத மாற்றுத் திறனாளியான ஒரு நபர் மனிதரீதியாக சிந்திக்க முடியாத சூழ்நிலைகளில் வேலை செய்ய வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் மிகவும் மோசமான மற்றும் அசுத்தமான இடத்தில் வசிக்க வைக்கப்பட்டதோடு, உரிமையாளரின் அவமதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளார். காவல் துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சோதனையின் போது, இவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததும், உரிமையாளர் காவலில் எடுத்து கொள்ளப்பட்டதோடு கேரேஜ்ஜும் மூடப்பட்டது.
இந்தச் சம்பவம், மனிதக் கடத்தல், வேலைக்கான உரிய சம்பளம் வழங்காமை மற்றும் மனித உரிமைகள் மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு மனிதக் கடத்தலுக்கு எதிரான அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்ன்-சென்-டெனியில் (Seine-Saint-Denis) நிலவும் சூழ்நிலையை சமாளிக்க, பொபினி (Bobigny) நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.