Paristamil Navigation Paristamil advert login

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

21 ஆடி 2025 திங்கள் 10:41 | பார்வைகள் : 122


ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி, மெஸ்ஸி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவானான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெனால்டி இல்லாமல் அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

ரொனால்டோ பெனால்டி இல்லாமல், 763 கோல்கள் அடித்திருந்தார்.

20-07-2025 நடைபெற்ற இன்டர் மியாமி அணி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதன் மூலம் ரொனால்டாவை விட 167 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள மெஸ்ஸி, 764 பெனால்டி அல்லாத கோல்களை அடித்து முதலிடம் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 938 கோல்களுடன் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்