Paristamil Navigation Paristamil advert login

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

21 ஆடி 2025 திங்கள் 11:41 | பார்வைகள் : 239


இஸ்ரேல் உணவுவிநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நான்குவயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள்.

பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது,அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள்.

சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார்.

யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது,ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது,அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்