அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோனோமரின் பிரபல CEO ராஜினாமா

21 ஆடி 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 573
அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோனோமரின் சிஇஓ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நியூயார்க்கில் அமைந்துள்ள டெக் நிறுவனமான ஆஸ்ட்ரோனோமரின் (Astronomer) தலைமை செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வந்தவர் ஆன்டி பைரன்.
இவர் கோல்ட்பிளே என்ற இசைக் கச்சேரியில் பங்கேற்றார். அப்போது அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் பெண் HRஐ கட்டிப்பிடித்தபடி இருந்துள்ளார். இது அவர் பக்கம் கமெரா திரும்பியபோது வெட்ட வெளிச்சமானது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆன்டி பைரன் விடுப்பில் சென்றதால் வேறொருவரை இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரோனோமர் தெரிவித்தது.
இந்த நிலையில் ஆன்டி பைரன் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1