Paristamil Navigation Paristamil advert login

நடிகர் பிரபாஸுக்கு நடந்தது என்ன ?

நடிகர் பிரபாஸுக்கு நடந்தது என்ன ?

21 ஆடி 2025 திங்கள் 12:17 | பார்வைகள் : 226


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் ஹீரோ என புகழப்படுபவர். தெலுங்கு நடிகரான பிரபாஸ் ‘பாகுபலி’ படம் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். ரூ.1000 கோடி வசூல்களை அசால்டாக கடந்து பிரபாஸின் இமேஜை கடந்த கால படங்கள் உயர்த்தியுள்ளன.

பிரபாஸுக்கு ‘பாகுபலி’ 2 பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. ஆனால் அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ திரைப்படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. வசூலிலும் தோல்வியை தழுவியது.

ரூ.300 கோடியில் உருவானதாக கூறப்படும் ‘ராதே ஷ்யாம்’ ரூ.200 கோடியை கூட வசூலிக்கவில்லை என தகவல் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இந்தப் படம் பிரபாஸுக்கு தொடர் தோல்வியாக அமைந்தது. அத்துடன் அடுத்து அவர் நடித்த ‘ஆதி புருஷ்’ தோல்வி என்பதை தாண்டி ட்ரால் மெட்டிரியலாக மாறியது. இந்தப் படம் வெளியானபோது பலரும் படத்தை கடுமையாக விமர்சித்தனர்.

பாகுபலி வெற்றிக்குப் பிறகு 3 படங்கள் தோல்வி. அடுத்து ‘சலார்’ மூலம் களமிறங்கிய பிரபாஸ் கடந்த கால தோல்விகளை மறக்கடிக்கும் வகையில் வெற்றி வாகை சூடினார். அடுத்து வெளியான ‘கல்கி 2898 ஏடி’ 1,200 கோடிகளுக்கும் மேல் வசூலிட்டி வரவேற்பை பெற்றது.

இதனிடையே அண்மையில் நடிகர் பிரபாஸ் தலையில் முடி கொட்டியிருப்பதாகவும், அவர் அதனை மறைக்க பல்வேறு நிகழ்வுகளில் தொப்பியை அணிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் செய்தனர்.  பிரபாஸ் தொடர்பான இந்தப் புகைப்படம் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.

உண்மையில், அது ஒரு செயற்கை நுண்ணறிவு புகைப்படம். அது தெரிந்தும் கூட, இணையவாசிகள் பலர் அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். மேலும், பிரபாஸ் தொப்பி அணிவதற்கு இதுதான் ஒரே காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பிரபாஸ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். தற்போது மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ராஜாசாப். 
இதனுடன்.. அவர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஃபௌஜி படத்திலும், சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்திலும் நடித்து வருகிறார் பிரபாஸ். அத்துடன் கல்கி 2 மற்றும் சலார் 2 ஆகியவையும் வரிசையில் உள்ளன. மொத்தத்தில், பிரபாஸ் இன்னும் 3-4 ஆண்டுகள் மிகவும் பிஸியாக இருப்பார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்