Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!

துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!!

21 ஆடி 2025 திங்கள் 12:24 | பார்வைகள் : 595


 

நேற்று ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை இரவு Blagnac,  (Toulouse) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

19 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். இரவு 11 மணி அளவில் வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டுள்ளார் எனவும், இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் உள்ளவர் எனவும், கடத்தல்காரர்களே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்