கனடா மீது மேலும் வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை

21 ஆடி 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 202
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் இருநாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடுவே அவர் இந்த திடீர் அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, கனடிய பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கடிதத்தை டிரம்ப் தனது Truth Social சமூக ஊடக பக்கத்தில் இரவில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நாடு அல்லது உங்கள் நாட்டுக்குள் உள்ள நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அமெரிக்காவில் உற்பத்தி செய்யத் தீர்மானித்தால் எந்தவிதமான வரியும் விதிக்கப்படமாட்டாது," என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப், இந்த 35% வரிவிதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், கனடா பதிலடி எடுத்தால் இது மேலும் உயர்த்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
கார்னியின் அலுவலகம், அவர் இந்த கடிதத்தை பெற்றுள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, கனடிய தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக , கார்னி தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.