Paristamil Navigation Paristamil advert login

ஒரு கப் காபி போதுமா? பாலியல் சார்ந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு!

ஒரு கப் காபி போதுமா? பாலியல் சார்ந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு!

15 மார்கழி 2021 புதன் 10:51 | பார்வைகள் : 8574


 நவீன வாழ்க்கை முறையில் ஆண்களுடைய ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து சிக்கலாகவே இருந்து வருகிறது. அதிலும் புகைப்பழக்கம், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து வேலைப்பார்த்தல் போன்ற விஷயங்களால் பாலியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகளவில் தோன்றுகிறது. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆண்களின் பாலியல் சார்ந்த சிக்கலை எளிதாகப் போக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

 
அந்த வகையில் தினமும் ஒரு கப் காபி குடித்தால் ஆண்களின் பாலியல் சார்ந்த பிரச்சனை தீரும் என்று டாக்டர் அப்ரார் முதல்தானி கூறுகிறார். அதாவது காபியில் உள்ள காஃபின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறதாம். மேலும் தினமும் இரவில் காபி அருந்துவதால் அவர்களுடைய செயல்திறன் அதிகரித்து, சகிப்புத்தன்மையும் கூடுகிறது.
 
மேலும் காபி குடிக்காத ஆண்களைவிட, காபி அருந்தும் ஆண்களுக்கு விறைப்பு தன்மை சார்ந்த குறைபாடுகள் இல்லாமல் இருப்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்துகள் Plos one எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
காபியைத் தவிர ஆண்களின் பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மேலும் சில உணவுகள் மிகவும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் வால்நட்ஸ் – வால்நட்ஸ்களில் தாமிரம், ஃபோலிக் அமிலம் பாஸ்பரஸ், வைட்டமின் பி6, மாங்கனீஸ் போன்றவை இருப்பதால் பாலியல் குறைபாடு உடையவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
 
திராட்சை- நார்சத்து, இரும்பு, கால்சியம் போன்றவை இருப்பதால் பாலியல் சிக்கலை திராட்சை விரைவில் குணப்படுத்துகிறது.
 
அத்திப்பழம் – நார்சத்து, புரதம் அக்ஸினேற்றிகள், இரும்பு போன்றவை இருப்பதால் அத்திப்பழமும் ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 
ஆப்பிள்கள் – நார்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை இருப்பதால் இதுவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 
வாழைப்பழம் – கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்றவை ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாக இருப்பதால் இதையும் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தவிர சர்க்கரை வள்ளி கிழங்கு, கேப்சிகம் போன்றவையும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்