அதிகமாக வரி செலுத்தி இருந்தால் உங்கள் பணத்தை திரும்ப பெறலாம்!!!

21 ஆடி 2025 திங்கள் 14:49 | பார்வைகள் : 937
வரித்துறை அதிகமாக வசூலித்த வரிகளை ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் திருப்பி செலுத்தவுள்ளது.
வருமானவரி மூலமாக வசூலிக்கப்படும் புதிய முறையின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்பட்ட தொகை சரிபார்க்கப்படுகிறது. வரி அதிகமாக வசூலிக்கப்பட்டிருந்தால் அல்லது வரிச்சலுகைகள் (குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, தானங்கள்) உள்ளவர்களுக்கு அந்தத் தொகை தானாகவே வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
வங்கி விபரங்கள் இல்லையெனில் காசோலை அனுப்பப்படும். மாறாக, சிலர் குறைவாக வரி செலுத்தியிருந்தால், மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும்.
இது €300-க்கு குறைவாக இருந்தால், ஒரே தவணையில் செப்டம்பர் 25 அன்று உங்களிடம் வசூலிக்கப்படும். அதிகமாக இருந்தால், நான்கு தவணைகளில் செப்டம்பர் 25, அக்டோபர் 27, நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 29 ஆகிய தேதிகளில் வசூலிக்கப்படும். உங்கள் impots.gouv.fr கணக்கில் உங்கள் நிலையைப் பார்க்கலாம் மற்றும் செப்டம்பர் 14க்குள் வங்கி விபரங்களை புதுப்பிக்கலாம்.